விளையாட்டு
சிறப்பாக விளையாடிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு விழா
சிறப்பாக விளையாடிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டு விழா
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணிக்கு மத்திய அரசின் சார்பில் டெல்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்திய அணி, மேலும் பல சாதனைகளை நிகழ்த்த அவர் வாழ்த்துக் கூறினார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இடைக்கால தலைவர் சி.கே. கண்ணா உள்ளிட்டோர் பாராட்டு விழாவில் பங்கேற்றனர். மகளிர் உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக இறுதி ஆட்டம் வரை முன்னேறிய இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பிலும் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, கோப்பையை இழந்தது.