சிட்னி ஓபனில் வீனஸ் வில்லியம்ஸ் பங்கேற்பு

சிட்னி ஓபனில் வீனஸ் வில்லியம்ஸ் பங்கேற்பு

சிட்னி ஓபனில் வீனஸ் வில்லியம்ஸ் பங்கேற்பு
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் சிட்னி ஓபன் போட்டியில் பங்கேற்பதை உறுதிசெய்துள்ளார். 

பிரபல டென்னிஸ் வீரரான செரினா வில்லியம்ஸின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் கடந்து 20 வருடங்களாக சிட்னி ஓபன் டென்னிஸில் விளையாடவில்லை. இந்நிலையில் சிட்னி ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதை வீனஸ் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி ஓபனில் அவர் கலந்து கொள்கிறார். 37 வயதாகும் வீனஸ் வில்லியம்ஸ், இந்தாண்டு விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com