கார் மோதி முதியவர் உயிரிழப்பு: சிக்கலில் வீனஸ் வில்லியம்ஸ்

கார் மோதி முதியவர் உயிரிழப்பு: சிக்கலில் வீனஸ் வில்லியம்ஸ்

கார் மோதி முதியவர் உயிரிழப்பு: சிக்கலில் வீனஸ் வில்லியம்ஸ்
Published on

வீனஸ் வில்லியம்ஸ் கார் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். வீனஸ் போக்குவரத்து விதியை மீறியதால்தான் விபத்து ஏற்பட்டது என்று போக்குவரத்து காவல்துறை கூறியுள்ள நிலையில் வீனஸ் தரப்பு அதை மறுத்துள்ளது.

அமெரிக்காவில் முதியவர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில், டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்-க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீனஸ் வில்லியம்ஸ் கடந்த ஒன்பதாம் தேதி, தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவரின் கார், அருகே சென்ற மற்றொரு காரில் மோதியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அப்போது விபத்தில் காயமடைந்த 74 வயது Jerome Barson, சிகிச்சைப் பலனின்றி 14 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். சிகப்பு விளக்கு எரிந்தபோது வீனஸ் காரில் சென்றதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வீனஸ் ‌தரப்பில் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com