அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். கடந்த மாதம் நிகழ்ந்த விபத்தில் வீனஸின் கார் மோதி முதியவர் உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல், வீனஸ் வில்லியம்ஸ் கதறி அழுதார். இதனால் அங்கிருந்து வெளியேறிய அவர், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.