\
வீனஸ் வில்லியம்ஸ் வீட்டில் கொள்ளை

வீனஸ் வில்லியம்ஸ் வீட்டில் கொள்ளை

வீனஸ் வில்லியம்ஸ் வீட்டில் கொள்ளை
Published on

பிரபல டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பங்களாவில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிரபல டென்னிஸ் சகோதரிகள் செரினா, வீனஸ் வில்லியம்ஸ். இவர்களுக்கு புளோரிடாவின் பாம்பீச் கார்டனில் பங்களா உள்ளது. இதில் வீனஸ் மட்டும் இப்போது வசித்துவருகிறார். வீனஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கடந்த செப்டம்பர் மாதம் விளையாடினார். அந்த காலகட்டத்தில் அவர் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. 4 லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் 5-ம் தேதிக்குள் இந்த கொள்ளை நடத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பலத்த பாதுகாப்பு கொண்ட இந்தப் பங்களாவில் கொள்ளை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதியின் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com