\
ஐபிஎல்-லுக்காக ராஜினாமா செய்தாரா பிரசாத்?

ஐபிஎல்-லுக்காக ராஜினாமா செய்தாரா பிரசாத்?

ஐபிஎல்-லுக்காக ராஜினாமா செய்தாரா பிரசாத்?
Published on

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி தேர்வுக்கு குழுத் தலைவர் பதவியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விலகியுள்ளார்.

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி சமீபத்தில் கோப்பையை கைப்பற்றியது. இந்த அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தவர் வெங்கடேஷ் பிரசாத். 30 மாதங்கள் இந்தப் பதவியில் சிறப்பாக பணியாற்றிய அவர், இப்போது திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கிரிக்கெட் வாரிய முன்னணி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய மானேஜர் பதவிக்கு அவர் விண்னப்பத்திருந்தார். அதற்கான நேர்முகத்தேர்விலும் பங்கேற்றார். ஆனால், முன்னாள் வீரர் சபா கரீமுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பயிற்சியாளராக சேர்வதற்காகவே இந்தப் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளர் ஆக இருப்பதாகத் தெரிகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com