விராத் கோலியின் மோசமான சாதனை

விராத் கோலியின் மோசமான சாதனை

விராத் கோலியின் மோசமான சாதனை
Published on

இந்திய அணிக்கெதிரான கான்பூர் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டியில் கேப்டனாக முதல் போட்டியிலேயே தோல்வியைச் சந்தித்த முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு விராத் கோலி சொந்தக்காரரானார். மேலும், இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி பெற்ற பெரிய வெற்றியாகவும் இந்த வெற்றி கருதப்படுகிறது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்ட முதல் போட்டியில் வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். தோனி கேப்டனாகச் செயல்பட்ட முதல் போட்டி சமனில் முடிந்தது. ஆனால் விராத் கோலி தோல்வியைச் சந்தித்துள்ளார். இதுவரை இந்திய அணியுடன் 9 டி20 போட்டிகளில் மோதியுள்ள இங்கிலாந்து அணி 6 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com