ஏமாற்றியது ’வேகம்’: போல்ட்டை முந்தினார் கேட்லின்

ஏமாற்றியது ’வேகம்’: போல்ட்டை முந்தினார் கேட்லின்

ஏமாற்றியது ’வேகம்’: போல்ட்டை முந்தினார் கேட்லின்
Published on

அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். 

லண்டனில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரரும் கடந்த முறை சாம்பியனுமான உசைன் போல்ட் 3ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் பந்தய இலக்கை 9 புள்ளி 92 விநாடிகளில் எட்டி தங்க பதக்கத்தை பறித்துச்சென்றார். சக நாட்டு வீரரான கிறிஸ்டியன் காலமன் 9 புள்ளி 94 விநாடிகளில் வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். 

விளையாட்டு ரசிகர்களின் நம்பிக்கை நாயகனான போல்ட்,100 மீட்டர் இலக்கை 9 புள்ளி 95 விநாடிகளில் அடைந்து ஏமாற்றமளித்தார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தற்போது தங்கம் வென்றுள்ள கேட்லின், ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக 2006 முதல் 2010 வரை தடை விதிக்கப்பட்டவர். இவர், கடந்த 2 சாம்பியன்ஷிப் போட்டிகளில் போல்டுக்கு அடுத்தபடியாக வந்து வெள்ளி பதக்கத்தை மட்டுமே பெற்றவர். நடப்பு தடகள சாம்பியன்ஷிப்புடன் ஓய்வுபெறவுள்ள உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கத்தை கோட்டைவிட்டது உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com