உசைன் போல்ட் 'கவர் டிரைவ்' ஆடி பார்த்திருக்கிறீர்களா?

உசைன் போல்ட் 'கவர் டிரைவ்' ஆடி பார்த்திருக்கிறீர்களா?
உசைன் போல்ட் 'கவர் டிரைவ்' ஆடி பார்த்திருக்கிறீர்களா?

உலகின் அதிவேக மனிதன் என கொண்டாடப்படும் ஜமைக்காவைச் சேர்ந்த ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் தன்னுடைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட் 2008,2012, 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் கலந்துக்கொண்டு தங்கம் வென்றவர். அதேபோல 2009, 2015 இல் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றும் தங்கம் வென்றார். 2017-இல் தொழில்பூர்வ தடகளத்திலிருந்து ஓய்வு பெற்றார் உசைன் போல்ட். அப்போது முதல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகிறார் இதுவரை உசைன் போல்ட்டின் சாதனையை முறியடிக்க ஒருவர் வரவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்காக பல சிறந்த வீரர்களை உருவாக்கிய நாடு ஜமைக்கா. அதனால் உசைன் போல்டுக்கு கிரிக்கெட் ஒன்றும் அன்னியமான விளையாட்டாக இருக்கவில்லை. அவருக்கு கிரிக்கெட் நன்றாகவே விளையாட வரும். இப்போது அண்மையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

அதில் பேட்டிங் செய்யும் உசைன் போல்ட், நண்பர் போடும் முதல் பந்தை டிபன்ஸ் செய்கிறார். இதற்கடுத்து அடுத்தப்பந்தை கவர் டிரைவ் ஸ்டைலில் அடிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com