விளையாட்டு
சரிந்தது ‘வேகம்’: காயத்துடன் விடைபெற்றார் போல்ட்
சரிந்தது ‘வேகம்’: காயத்துடன் விடைபெற்றார் போல்ட்
உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தசைப்பிடிப்பு காரணமாக தனது கடைசிப் போட்டியை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றார்.
16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஜமைக்கா ஜாம்பவான் உசேன் போல்ட், தனது கடைசி பந்தயமான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் தங்கள் அணிக்காக 3-வது வீரராக ஓடினார். அப்போது அவரது இடது காலில் தடைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மைதானத்தில் சரிந்து விழுந்தார். இதனால் ஜமைக்கா அணியால் போட்டியை நிறைவு செய்யமுடியவில்லை. இந்தப் போட்டியில் பிரிட்டன் அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. அமெரிக்கா இரண்டாவது இடமும், ஜப்பான் மூன்றாவது இடமும் பிடித்தன.