\
மன்கட் முறையில் பேட்ஸ்மேனை அவுட் செய்த உகாண்டா பவுலர்! யுவராஜ்-ன் ஷாக் கமண்ட்

மன்கட் முறையில் பேட்ஸ்மேனை அவுட் செய்த உகாண்டா பவுலர்! யுவராஜ்-ன் ஷாக் கமண்ட்

மன்கட் முறையில் பேட்ஸ்மேனை அவுட் செய்த உகாண்டா பவுலர்! யுவராஜ்-ன் ஷாக் கமண்ட்
Published on

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பப்புவா நியூ கினி மற்றும் உகாண்டா அணிகள் விளையாடிய போட்டியில் மன்கட் முறையில் பேட்ஸ்மேனை அவுட் செய்த உகாண்டா பவுலர் ஜோசப் பாகுமா. 

View this post on Instagram

A post shared by ICC (@icc)

  

பப்புவா நியூ கினி அணி பேட் செய்தபோது 16-வது ஓவரில் நான்-ஸ்ட்ரைக்கர் என்டில் இருந்த பேட்ஸ்மேன் ஜான் கரிகோ, பந்து வீசுவாதற்கு முன்பாகவே கிரீஸை விட்டு வெளியே நின்றுள்ளார். அதை கவனித்த பவுலர் பாகுமா மன்கட் முறையில் ஸ்டம்புகளை தகர்த்து, நடுவரிடம் அவுட் என அப்பீல் செய்துள்ளார். உடனடியாக நடுவரும் அவுட் கொடுத்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் சம்ஷி, “இதில் தவறு ஏதும் இல்லை” என சொல்லியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், “முற்றிலும் மோசமானது” என கமெண்ட் செய்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இது மாதிரியான மன்கட் முறை அவுட் நிகழ்வுகள் அரிதாகவே நடக்கிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com