154 கிமீ வேகத்தில் தோனிக்கு யார்க்கர் - உம்ரான் மாலிக் வீசிய ஐபிஎல் சீசனின் அதிவேகப் பந்து

154 கிமீ வேகத்தில் தோனிக்கு யார்க்கர் - உம்ரான் மாலிக் வீசிய ஐபிஎல் சீசனின் அதிவேகப் பந்து

154 கிமீ வேகத்தில் தோனிக்கு யார்க்கர் - உம்ரான் மாலிக் வீசிய ஐபிஎல் சீசனின் அதிவேகப் பந்து
Published on

சென்னை அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் பவுலர் உம்ரான் மாலிக் 154 கி.மீ வேகத்தில் வீசிய பந்து “இந்த ஐபிஎல் சீசனின் அதிவேகப் பந்து” என்ற அந்தஸ்தைப் பெற்றது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் இந்த சீசனில் அபாரமான ஃபார்மில் உள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாத போதிலும், ஐபிஎல் 2022 சீசனில் அதிவேகமான பந்து வீச்சை ஒருமுறை அல்ல இரண்டு முறை வீசினார் உம்ரான் மாலிக். முதல் இன்னிங்ஸின் போது, 10வது ஓவரில் மணிக்கு 154 கி.மீ. வேகத்தில் சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாடுக்கு எதிராக வீசினார். ஆனால் ருதுராஜ் அதை பவுண்டரியாக மாற்றினார்.

அதன்பின் மீண்டும் ஒருமுறை 19வது ஓவரில் மணிக்கு 154 கிமீ வேகத்தை எட்டினார், இந்த முறை ஒரு யார்க்கரை சென்னை கேப்டன் தோனிக்கு எதிராக வீசினார். அட்டகாசமான அந்த யார்க்கரில் தோனி ஒரு ரன் மட்டும் எடுத்தார். சமீபத்திய ஐபிஎல் தொடரில் முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக ஏராளமான பாராட்டுகளைப் பெற்ற அவர், மீண்டும் ஒரு முறை பாராட்டுகளை அள்ளியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com