விராட் கோலியின் ரெக்கார்டை உமேஷ் யாதவ் சமன் செய்துவிட்டாரா? அது என்ன சாதனை?

விராட் கோலியின் ரெக்கார்டை உமேஷ் யாதவ் சமன் செய்துவிட்டாரா? அது என்ன சாதனை?
விராட் கோலியின் ரெக்கார்டை உமேஷ் யாதவ் சமன் செய்துவிட்டாரா? அது என்ன சாதனை?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ், டெஸ்ட் அரங்கில் முன்னாள் கேப்டன் விராட் கோலியுடனான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையே தற்போது 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி, இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் முதல் பேட் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் சுழலில் சுருண்டது. 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணியில், அதிகபட்சமாக விராட் கோலி 22, சுப்மன் கில் 21, ஸ்ரீகர் பரத் மற்றும் உமேஷ் யாதவ் தலா 17 ரன்களை எடுத்தனர். உமேஷ் யாதவ் எடுத்த 17 ரன்கள் மூலம் இந்திய அணி 100 ரன்களைக் கடக்க உதவியது. ஆஸ்திரேலிய தரப்பில் குன்னமென் 5 விக்கெட்களையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், மர்பி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இன்று 13 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி மூலம் 17 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் விராட் கோலி சாதனையை உமேஷ் யாதவ் சமன் செய்துள்ளார். அதாவது, 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள உமேஷ் யாதவ், இதுவரை 24 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதேபோல, விராட் கோலியும் தனது சர்வதேச டெஸ்டில் 8217 ரன்களை அடித்திருந்தாலும், 24 சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார். இதன்மூலம், டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள இந்திய வீரர்களில் 17வது இடத்தை விராட் கோலியுடன் உமேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். உமேஷ் யாதவ் அடித்த சிக்ஸரை கண்டு, பெவிலியனில் இருந்த விராட்கோலி சிறுவன் போல துள்ளிக் குதித்து கொண்டாடினார்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com