உங்கள் கேரியர் முடிந்து விட்டது: பாக். கிரிக்கெட் வீரரை கலாய்த்த நெட்டிசன்கள்

உங்கள் கேரியர் முடிந்து விட்டது: பாக். கிரிக்கெட் வீரரை கலாய்த்த நெட்டிசன்கள்

உங்கள் கேரியர் முடிந்து விட்டது: பாக். கிரிக்கெட் வீரரை கலாய்த்த நெட்டிசன்கள்
Published on

விலை உயர்ந்த பெண்ட்லி காருடன் போஸ் கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலை வாடகைக்கார் ஓட்டி பிழைப்பை நடத்துங்கள். உங்கள் கேரியர் முடிந்து விட்டது என்று நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளினர். 

பாகிஸ்தான் உள்ளூர் தொடரான பிஎஸ்எல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக உமர் அக்மல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், விலை உயர்ந்த பெண்ட்லி காருடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை அக்மல் ட்விட்டரில் பதிவிட்டார். கடும் வேலைக்குப் பின்னர் லண்டனில் ஓய்வெடுப்பதாக உமர் அக்மல் அந்த புகைப்படத்துக்கு கேப்ஷன் கொடுத்திருந்தார். 
இந்த புகைப்படத்தினைப் பார்த்து கொதித்தெழுந்த ரசிகர்கள், மேட்ச் பிக்ஸிங் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கியதுதானா அந்த கார் என்று கலாய்க்கத் தொடங்கி விட்டனர். பெண்ட்லி கார் வாங்கும் அளவுக்கு உங்களுக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?.. வேறு ஒருவருக்குச் சொந்தமான காருடன் போஸ் கொடுத்திருக்கிறீர்களா? என்றும் ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனோ, உங்களது கிரிக்கெட் கேரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது; வாடகைக் கார் ஓட்டி பிழைப்பை நடத்திக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com