\
3 ஆண்டுகள் தடைக்கு எதிராக உமர் அக்மல் மேல்முறையீடு

3 ஆண்டுகள் தடைக்கு எதிராக உமர் அக்மல் மேல்முறையீடு

3 ஆண்டுகள் தடைக்கு எதிராக உமர் அக்மல் மேல்முறையீடு
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் தனக்கு விதித்த 3 ஆண்டு தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் போது உமர் அக்மலை சூதாட்ட நபர்கள் அணுகியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அவர் கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரிவிக்காமல் விட்டுவிட்டதால் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அவர் மீது சூதாட்டப் பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் தனக்கு விதிக்கப்பட்டுள்ள, 3 தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டைப் பரிசீலித்துள்ள கிரிக்கெட் நிர்வாகக் குழு, இதுதொடர்பாக விசாரணை செய்ய நீதிபதிகள் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு மேற்கண்ட முடிவுகளை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com