சாம்பியன்ஸ் லீக் : நேருக்கு நேர் மோதவுள்ள மெஸ்ஸி VS ரொனால்டோ!

சாம்பியன்ஸ் லீக் : நேருக்கு நேர் மோதவுள்ள மெஸ்ஸி VS ரொனால்டோ!
சாம்பியன்ஸ் லீக் : நேருக்கு நேர் மோதவுள்ள மெஸ்ஸி VS ரொனால்டோ!

கால்பந்தாட்ட உலகின் சூப்பர் ஸ்டார்களான அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகீஸின் ரொனால்டோவும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்தி வரும் UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் மோத உள்ளனர். 

இதுவரை கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து மெஸ்ஸியும், ரொனால்டோவும் கால்பந்து லீக் தொடர்கள், நட்பு ரீதியிலான ஆட்டங்கள் என 35 முறை நேருக்கு நேர் சந்தித்து விளையாடியுள்ளனர். இதில் மெஸ்ஸி 22 முறையும், ரொனால்டோ 19 முறையும் கோல் அடித்துள்ளனர். 

இந்நிலையில் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸியும், ஜூவாண்டஸ் அணிக்காக ரொனால்டோவும் விளையாட உள்ளனர். இரு அணிகளும் UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப் ஜி-யில் இடம் பெற்றுள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாட உள்ளனர். நிச்சயமாக இந்த ஆட்டம் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com