அஜித்குமாருக்கு உதயநிதி வாழ்த்து
அஜித்குமாருக்கு உதயநிதி வாழ்த்துpt

”தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்..”! அஜித்குமாருக்கு உதயநிதி வாழ்த்து!

துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி.
Published on

விடாமுயற்சி, குட் பேட் அக்லி முதலிய இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித்குமார், படப்பிடிப்பு வேலைகளை முடித்தபிறகு துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள புறப்பட்டுச்சென்றார்.

AJITH KUMAR RACING
AJITH KUMAR RACINGWEB

சமீபத்தில் ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் ரேஸிங் அணியை உருவாக்கிய நடிகர் அஜித்குமார், தன்னுடைய அணியுடன் சேர்ந்து அடுத்தடுத்து நடக்கவிருக்கும் கார் பந்தயங்களில் அடுத்த 9 மாதங்களுக்கு பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்றுவரும் 24H கார் ரேஸில் அஜித்குமார் அணியுடன் கலந்துகொண்ட அஜித்குமார் பேசுகையில், கார் பந்தயங்கள் நடைபெறும் காலங்களில் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும், ரேஸ் இல்லாத அக்டோபர்-மார்ச் இடையேயான காலகட்டத்தில் படத்தில் நடிக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தகுதிச்சுற்றில் 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்குமார் ரேஸிங் அணி, துபாயில் நடைபெற்ற 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அந்த வெற்றியை அணியுடன் சேர்ந்து அஜித்குமார் துள்ளிக்குதித்து கொண்டாடினார்.

அஜித்குமாருக்கு உதயநிதி வாழ்த்து
துபாய் 24H கார் ரேஸில் 3வது இடம்.. துள்ளிக்குதித்த அஜித்..!

அஜித்குமார் ரேஸிங் அணிக்கு உதயநிதி வாழ்த்து!

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி, போர்ஷே 992 கப் கார் (எண் 901) ரேஸ், போர்ஷே கேமன் GT4 (எண் 414) ரேஸ் என இரண்டு பிரிவுகளில் பங்கேற்றது. இதில் GT4 ரேஸில் மட்டும் அஜித் ஓட்டுநராக பங்கேற்றார்.

முதல்முறையாக ஒரு சர்வதேச ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் அணி, முதல் பங்கேற்பிலேயே போர்ஷே 992 கப் கார் ரேஸ் பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது. இந்த வெற்றி அணிக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அஜித்குமார் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி வெற்றியில் பங்கேற்றார்.

இந்நிலையில் அஜித்குமார் மற்றும் அவருடைய அஜித்குமார் ரேஸிங் அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை பகிர்ந்துவரும் நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்த அவருடைய பதிவில், “2025 துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமார் சார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தைப் பிடித்ததை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் அஜித்குமார் ரேஸிங் அணி திராவிட மாடல் அரசை காட்சிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் லோகோவை கார் ரேஸின்போது பயன்படுத்தியதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்

தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று நமது தேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென அஜித்குமார் மற்றும் அவரது குழுவை வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அவர் மட்டுமில்லாமல் திரையுலகை சேர்ந்த மாதவன், சிவகார்த்திகேயன், இயக்குநர் அமீர், கார்த்திக் சுப்புராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்டவர்களும் அஜித்குமார் மற்றும் அவருடைய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அஜித்குமாருக்கு உதயநிதி வாழ்த்து
‘அணிக்கு திரும்பிய முகமது ஷமி..’ இங்கிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com