சூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

சூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

சூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!
Published on

சூதாட்டச் சர்ச்சையில் சிக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி கேப்டன் உட்பட 3 வீரர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டி-20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை தொடங்குகிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. அதில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, சூதாட்டச் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அணியின் கேப்டன் முகமது நவீத், ஷாய்மன் அன்வர், கதீர் அகமது ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

உள்ளூர் வீரர் மெஹர்தீப் ஜாயகருடன் (Mehardeep Chhayakar) சேர்ந்து இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் அணி, சூதாட்ட புகாரில் சிக்குவது இது முதல்முறையல்ல. 

நவீத், சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக, சுழற் பந்துவீச்சாளர் அகமது ராசா  நியமிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com