விளையாட்டு
உலகக்கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்
உலகக்கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்
பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவிள் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் பிரான்ஸ் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஈ பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் மெக்சிகோ அணியை தோற்கடித்தது.