விளையாட்டு
U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர்: அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு!
U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர்: அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு!
17 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அமிதாப் பாட்டாச்சார்யா என்ற பாடலாசிரியர் எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு பிரிதம் இசை அமைத்துள்ளார். இதில் சுனிதி சவுகான், நீதி மோகன், பாபுல் சுப்ரியா, ஷான், பபோன், மைகா உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் பிரபல ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனின் நடனக்காட்சியும் பாடலில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் துடிப்பு மற்றும் தனித்தன்மை ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் அந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் முதன்முறையாக இந்தியாவில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் ஆறு நகரங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.