இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.
முதல் மூன்று ஒரு நாள் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, நான்காவது போட்டியில் தோற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒரு நாள் போட்டி, பெர்த்-தில் இன்று நடந்து வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அபாரமாக தொடங்கிய அந்த அணியின் ராய் 49 ரன்களும் பேர்ஸ்டோவ் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 62 ரன்களும் ஹேல்ஸ் 35 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களின் வீழ்ந்ததால், அந்த அணி, 47.4 ஓவர்களில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்குகிறது.