அதானி குழுமம் முதல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வரை .. ஐபிஎல் அணியை குறிவைக்கும் நிறுவனங்கள்

அதானி குழுமம் முதல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வரை .. ஐபிஎல் அணியை குறிவைக்கும் நிறுவனங்கள்
அதானி குழுமம் முதல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வரை .. ஐபிஎல் அணியை குறிவைக்கும் நிறுவனங்கள்

ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் எதிர்வரும் 2022 சீசனுக்கு புதிதாக இரண்டு அணிகள் இணைய உள்ளன. அதனால் இப்போதுள்ள டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என இப்போதுள்ள 8 அணிகளையும் சேர்த்து மொத்தம் 10 அணிகள் வரும் சீசனில் விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

புதிதாக வர உள்ள இரண்டு அணிக்காக உரிமையை ஏல நடைமுறை மூலம் மேற்கொண்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம். இந்நிலையில் அந்த இரண்டு புதிய அணிகளில் ஒரு அணியை தங்களுக்கு உரிமையாக்கி கொள்ளும் நோக்கில் அதானி குழுமம், ஆர்.பி சஞ்சீவ் கோயங்கா குழுமம், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் அரபிந்தோ பார்மா மாதிரியான நிறுவனங்கள் அதிக தொகைக்கு அணியை வாங்க ஏலத்திற்கான விண்ணப்பத்தில் கோரி உள்ளதாக தெரிகிறது. 

எப்படியும் இதில் எந்த நிறுவனம் புதிய அணிகளை வாங்குகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும். ஐபிஎல்லில் இடம்பெறும் மேலும் 2 அணிகள் எவை என்பதற்கான போட்டியில் அகமதாபாத், லக்னோ, கட்டாக், தர்மசாலா, இந்தூர், கவுகாத்தி நகரங்கள் காத்துள்ளன. அதே போல வீரர்களின் ஏலம் எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த முறை மெகா Auction நடைபெற உள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com