கைகள் இல்லாமல் பந்துவீசிய ‘நம்பிக்கை’ சிறுவன் - ரித்திமான் வீடியோ

கைகள் இல்லாமல் பந்துவீசிய ‘நம்பிக்கை’ சிறுவன் - ரித்திமான் வீடியோ
கைகள் இல்லாமல் பந்துவீசிய  ‘நம்பிக்கை’ சிறுவன் - ரித்திமான் வீடியோ

இரண்டு கைகளும் இன்றி கிரிக்கெட் விளையாட்டில் பந்துவீசும் சிறுவனின் வீடியோ ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது தேர்தல் திருவிழா நடந்து வருகிறது. இளைஞர்கள் மத்தியில் அதனை மிஞ்சும் ஐபிஎல் திருவிழா சென்று கொண்டிருக்கிறது. தெருக்கள், மைதானங்கள், சமூக வலைத்தளங்கள் என எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் தான் காணப்படுகிறது. கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக இருப்பது ஒரு பெருமை என்றால், சிறந்த பந்துவீச்சாளர்களாக இருப்பது அதைவிட பெருமை என்பது கிரிக்கெட் மயக்கம். 

ஆனால் பந்துவீசுவதற்கு கைகள் என்பது மிக முக்கியம். கையில் சிறிய வலி இருந்தாலும் பந்துவீசு கடினம். இப்படி இருக்கையில், இரு கைகளும் இல்லாமல் தன்னம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் கொண்டு சிறுவர் ஒருவர் வீடியோவில் பந்துவீசுகிறார். அந்த வீடியோவை கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது சாஹா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார். 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com