விளையாட்டு
உலகக்கோப்பை சைக்கிள் போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் தகுதி
உலகக்கோப்பை சைக்கிள் போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் தகுதி
ஆசியக் கோப்பை சைக்கிள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இரு இந்திய வீராங்கனைகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
உலகக்கோப்பை சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள இந்திய வீராங்கனைகளான டெபோரா ஹெரால்ட், அலீனா ரெஜி ஆகியோர் தகுதிபெற்றனர். டெல்லியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வாயினர். உலகக்கோப்பை சைக்கிள் பந்தயம் இங்கிலாந்தின் மேன்செஸ்டர் நகரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.