மின்னலை விட வேகமான தோனி ஸ்டம்பிங் - ‘.16’ செகண்ட்தான்
இந்திய அணியில் தோனி ஏன் இன்னும் நீடிக்கிறார் என்ற கேள்வி அவ்வவ்போது எழும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கு இன்றைய போட்டியில் தன்னுடைய திறமையால் தோனி பதில் அளித்துள்ளார். கேப்டன்ஷிப்பில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்த தோனி, தான் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என்பதையும் இன்றளவும் நிரூபித்து வருகிறார். ஸ்டம்பிற்கு பின்னாள் இருக்கும் அவர் இரண்டு முக்கியமான விஷயங்களுக்கு ஸ்பெஷல். ஒன்று டிஆர்எஸ் என்றும் ரிவிவ் கேட்பதற்கு. மற்றொரு மின்னல் வேக ஸ்டம்பிங்.
இன்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி இரண்டு ஸ்டம்பிங் மற்றும் ஒரு ரன் அவுட் செய்தார். அதில், 41வது ஓவரின் கடைசி பந்தில் லிடன் தாஸை தோனி செய்த ஸ்டம்பிங் ரசிகர்கள்களை வியக்க வைத்துவிட்டது. சதம் விளாசி இந்திய அணி நெருக்கடி கொடுத்து கொண்டு இருந்தவர் லிடன். கடைசி வரை அவர் களத்தில் இருந்திருந்தால் நிச்சயம் வங்கதேசம் 250 ரன்களை கடந்து இருக்கும்.
ஆனால், லிடன் அசந்த நேரத்தில் தோனி ஸ்டம்பிங் செய்துவிட்டார். மிகவும் துல்லியமான நூலிழையில் அவுட் ஆனார் லிடன். மூன்றாவது அம்பயரை நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு தான் அவுட் என்பதை அறிவித்தார். தோனி 0.16 செகண்ட் வேகத்தில் ஸ்டம்பிங் செய்துள்ளார்.
இந்த ஸ்டம்பிங்கை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வழக்கம் போல் புகழ்ந்து தள்ளி உள்ளனர். ஸ்டம்பிங் செய்யப்பட்ட படத்தை பலரும் பதிவிட்டுள்ளார்.
சில கமெண்ட்கள்:-
- தோனியை விட மின்னல் வேகமானது இல்லை
- தோனி அவுட் கொடுத்த பின்னர் மூன்றாவது நடுவர் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது
- எது வேகமானது 1) மின்னல் 2) சத்தம் 3) எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸ் 4) தோனியின் ஸ்டம்பிங்
- தோனி எல்லையில் நிறுத்தப்பட வேண்டும் அப்பொழுதுதான் வங்கதேசத்தில் ஊடுருவி வரமாட்டார்கள்
- எச்சரிக்கை - தோனி ஸ்டம்பிற்கு பின்னால் இருக்கும் போது கோட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்