இன்று முத்தரப்பு டி20: இந்தியாவின் வெற்றி தொடருமா?
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8-ஆம் தேதி இந்தியா- பங்களாதேஷ், 10 ஆம் தேதி இலங்கை- பங்களாதேஷ், 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-பங்களாதேஷ், 16 ஆம் தேதி இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.
இதில் தென்னாப்பிரிக்கத் தொடரில் பங்கேற்ற கேப்டன் விராத் கோலி, விக்கெட் கீப்பர் தோனி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சளர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்புவில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கத் தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ள இந்திய அணியின் வெற்றி இதிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல சமீபத்தில் நடந்த பங்களாதேஷ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை, இந்தத் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.
அணி விவரம்:
ரோகித், தவான், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சேஹல், அக்ஷர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், உனட்கட், முகமது சிராஜ், ரிஷப் பன்ட்.