கோலியை சொல்லி வெச்சு தூக்கிய போல்ட் !

கோலியை சொல்லி வெச்சு தூக்கிய போல்ட் !

கோலியை சொல்லி வெச்சு தூக்கிய போல்ட் !
Published on

கோலியின் விக்கெட்டை வீழ்த்தவே களமிறங்குகிறேன் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் ட்ரெண்ட் போல்ட்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்று 348 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் இசாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், அஷ்வின் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை, 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி 19 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலி முதல் இன்னிங்ஸிலும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்திருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு பேட்டியளித்த ட்ரெண்ட் போல்ட் “தனிப்பட்ட முறையில் எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதிலும் விராட் கோலி போன்ற பேட்ஸ்மேனை இத்தொடரில் அவுட்டாக்கி எனது திறனை நானே சோதித்துக் கொள்வேன். ஆனால் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். எல்லோருக்கும் தெரியும் அவர் எத்தகைய வீரரென்று” என்றார். அவர் சொன்னது போலவே கோலியின் விக்கெட்டை வீழ்த்தி தனது திறனை நிரூபித்துவிட்டார் ட்ரெண்ட் போல்ட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com