“கோலியின் விக்கெட்டை வீழ்த்தவே களமிறங்குகிறேன்” சீறும் ட்ரெண்ட் போல்ட் !

“கோலியின் விக்கெட்டை வீழ்த்தவே களமிறங்குகிறேன்” சீறும் ட்ரெண்ட் போல்ட் !
“கோலியின் விக்கெட்டை வீழ்த்தவே களமிறங்குகிறேன்” சீறும் ட்ரெண்ட் போல்ட் !

இந்தியா உடனான டெஸ்ட் போட்டியில் கோலியை அவுட்டாக்கி தன்னுடைய திறனை சோதிப்பேன் என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் போட்டியை நியூசிலாந்தும் முழுமையாக வென்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 21 ஆம் தேதி தொடங்குகிறது. காயம் காரணமாக நியூசிலாந்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் போல்ட் டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடவில்லை. ஆனால் இப்போது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போல்ட், “தனிப்பட்ட முறையில் எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதிலும் விராட் கோலி போன்ற பேட்ஸ்மேனை இத்தொடரில் அவுட்டாக்கி எனது திறனை நானே சோதித்துக் கொள்வேன். ஆனால் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். எல்லோருக்கும் தெரியும் அவர் எத்தகைய வீரரென்று” என்றார்.

மேலும் தொடர்ந்த போல்ட், “போட்டி நடைபெறவுள்ள பேசின் பார்க் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது. காயத்திலிருந்து மீண்டு வர எனக்கு 6 வாரங்களே இருந்தது. ஆனாலும் கடுமையான பயிற்சிக்கு பின்பு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவுடனான போட்டி சவாலானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு நல்ல டெஸ்ட் போட்டியை எதிர்பார்க்கலாம்."

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com