ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன
மூன்று முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை, ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை அணி பொறுத்த வரை வழக்கம் போல் முன்னணி வீரர்கள் பலர் இடம் பெற்று இருந்தாலும் அந்த அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்காததால் நெருக்கடியில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.
கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பஞ்ஜாப் அணியுடன் ஒரு வெற்றியும், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியும் கண்டுள்ளது. பெங்களூர் அணியிலும் பல முன்னணி வீரர்கள் இருந்தும் பெரிய அளவில் யாரும் சோபிக்கவில்லை. கோலி, டிவில்லியர்ஸ் அந்த அணிக்கு பேட்டிங்கில் கை கொடுத்தாலும் பந்து வீச்சு பலவீனமாகவே இருகிறது. மும்பை அணி முதல் வெற்றியை பெற்றுப் புள்ளி பட்டியலில் கணக்கை தொடங்கப் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.