ஒலிம்பிக் போட்டிக்கு தயாரானது டோக்கியோ ! புதிய ஒலிம்பிக் டார்ச் ரெடி

ஒலிம்பிக் போட்டிக்கு தயாரானது டோக்கியோ ! புதிய ஒலிம்பிக் டார்ச் ரெடி
ஒலிம்பிக் போட்டிக்கு தயாரானது டோக்கியோ ! புதிய ஒலிம்பிக் டார்ச் ரெடி

ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் விளையாடி, நாட்டிற்காக பதக்கம் வெல்வதே விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கனவாக இருக்கும். அதற்காக விளையாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள். இம்முறை ஒலிம்பிக் போட்டி 2020ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது. இதற்காக ஜப்பான் அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் அதன் ஜோதி ஏற்றப்படும் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இதற்கு ஒலிம்பிக் ‘டார்ச்’ பயன்படுத்தப்படும்.

இந்நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிக்காக பிரத்யேக வடிவில் ஒரு புதிய டார்ச்சை ஜப்பான் வடிவமைத்துள்ளது. இதனை ஜப்பானின் டோக்யூஜின் யோஷியோகா வடிவமைத்துள்ளார். இந்த டார்ச் ஜப்பானின் பூல்லட் ரயில் உருவாக்கப்படும் அதே பொருளால் தயாரிக்கப்படுள்ளது. இது 71 செண்டிமீட்டர் நீலமும், 1.2 கிலோ எடையும் கொண்டுள்ளது. அத்துடன் இதன் மேல் பகுதி ஜப்பானில் பிரபலமான ‘சக்குரா’(செர்ரி பிளாசம்)வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டார்ச்சில் இருக்கும் ஒலிம்பிக் ஜோதி காற்றினால் அனையாத வகையில் டார்ச் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த டார்ச்சை பார்வையற்ற மாற்றுதிறனாளிகளும் எளிதில் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஒரு குறிப்புகள் டார்ச்சில் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் டார்ச் ரிலே புகுஷிமா நகரத்தில் வரும் 2020 மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com