விளையாட்டு
பாராலிம்பிக்: உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்
பாராலிம்பிக்: உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமாருக்கும் பிரிட்டன் வீரர் ஜானதனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பிரவீன் குமார் வென்றார். நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.