பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதி

பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதி
பாராலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதி
பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். 
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. பாராலிம்பிக் அறிமுக போட்டியாக இடம் பெற்றுள்ள பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-10, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மனோஜ் சர்காரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் உக்ரைன் வீரர் ஒலக்சாண்டர் சிர்கோவை, பிரமோத் பகத் எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-12, 21-9 என்ற செட் கணக்கில் ஒலெக்சாண்டர் சைர்கோவை வீழ்த்தி பிரமோத் பகத் வெற்றி பெற்றார். இவ்வெற்றியின் மூலம் ஆண்கள் ஒற்றையர் எஸ்எல் 3 பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்கு பிரமோத் பகத் தகுதி பெற்றுள்ளார். பாராலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்ய பிரமோத்துக்கு இன்னும் ஒரு வெற்றி தேவை என்ற நிலை உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com