ஒரே நாளில் மூன்று அசத்தலான ஆட்டங்கள் - டி20 உலகக் கோப்பையில் இன்று கிரிக்கெட் திருவிழா

ஒரே நாளில் மூன்று அசத்தலான ஆட்டங்கள் - டி20 உலகக் கோப்பையில் இன்று கிரிக்கெட் திருவிழா

ஒரே நாளில் மூன்று அசத்தலான ஆட்டங்கள் - டி20 உலகக் கோப்பையில் இன்று கிரிக்கெட் திருவிழா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று 3 ஆட்டங்கள் நடக்கின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்திய நேரப்படி காலை 8:30 மணிக்கு சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் வெற்றியின் விளிம்புவரை சென்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழையால் அந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இன்றைய ஆட்டத்திலாவது தென் ஆப்ரிக்கா அணி பக்கம் அதிர்ஷடக் காற்று வீச வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மறுபக்கம், முந்தைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் இன்று களம் காண்கிறது வங்காள தேசம்.

இன்று மதியம் 12:30 மணிக்கு சிட்னியில் நடைபெறும் அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் சந்திக்கின்றன. நெதர்லாந்து அனுபவம் குறைந்த அணி என்பதால்  இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நெருக்கடி இன்றி விளையாடலாம். ஆனாலும், சில சமயங்களில் நெதர்லாந்து, எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் அந்த அணியை இந்தியா கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். டி20 ஆட்டங்களில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்றுதான் முதல்முறையாக மோத உள்ளன. இதற்கு முன்பு இவ்விரு அணிகளுக்கிடையே நடந்த 2 ஒரு நாள் ஆட்டங்களில் இந்தியாதான் வென்றுள்ளது.

இன்று மாலை 4:30 மணிக்கு பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -ஜிம்பாப்வே  அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி தனது முந்தைய ஆட்டத்தில் இந்தியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தானை வீழ்த்த ஜிம்பாப்வே அணியும் நம்பிக்கையுடன் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிக்க: இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து! எங்கே கோட்டை விட்டது பட்லர் டீம்?!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com