
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் நடப்பு சீசனில் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. பெங்களூரு 5 வெற்றிகளையும், கொல்கத்தா 2 வெற்றிகளையும் வசப்படுத்தியுள்ளன.
இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் பெங்களூரு 13 முறையும், கொல்கத்தா 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போட்டியில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் கொல்கத்தா அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.