ரஷ்யாவில் களைகக்கட்டி வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், இன்று 4 போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஏ பிரிவில் நடைபெறும் ஆட்டம் ஒன்றில் , ஏற்கெனவே நாக் அவுட் சுற்றை உறுதி செய்துவிட்ட உருகுவே மற்றும் ரஷ்யா அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி சமரா நகரில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. வோல்கோகிராட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் , சவுதி அரேபியா அணியை எதிர்த்து எகிப்து அணி விளையாடுகிறது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இவ்விரு அணிகளும் களம் காண்கின்றன.
பி பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி நாக் அவுட் சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கலினின்கிராட் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்குத் தொடங்குகிறது. சரன்க்ஸ் நகரில் நடைபெறும் மற்றொரு முக்கிய போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
இன்றைய போட்டி
உருகுவே vs ரஷ்யா - 7.30 PM
சவுதி அரேபியா vs எகிப்து - 7.30 PM
ஸ்பெயின் vs மொராக்கோ - 11.30 PM
ஈரான் vs போர்ச்சுகல் - 11.30 PM