சாதனைகளின் விளிம்பில் தோனியின் சி.எஸ்.கே. ! வெல்லுமா சன் ரைசர்ஸை ?

சாதனைகளின் விளிம்பில் தோனியின் சி.எஸ்.கே. ! வெல்லுமா சன் ரைசர்ஸை ?

சாதனைகளின் விளிம்பில் தோனியின் சி.எஸ்.கே. ! வெல்லுமா சன் ரைசர்ஸை ?
Published on

11ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெள்ளிகிழமை நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. இந்நிலையில் கோப்பையை யார் வெல்வது என்ற முனைப்பில் 2 முறை சாம்பியனான சென்னை அணியும், ஒரு முறை சாம்பியனான ஹைதராபாத் அணியும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஐபிஎல் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7ஆவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

தோனி தலைமையிலான சென்னை அணி ஏற்கெனவே 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் களமிறங்குகிறது. ஹைதரபாத் அணி கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நேருக்கு நேர் மோதிய 9 ஆட்டங்களில், சென்னை அணி 7ல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிட்டதக்கது.

இந்நிலையில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் ‘சின்ன தல’ ரெய்னா இன்னும் 47 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் எடுக்கும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். அதேபோல் கேப்டன் தோனி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் டி20 போட்டியில் கேப்டனாக அவர் பெரும் 150 வெற்றியாகும். 

சென்னை அணி இந்த சீசனில்  ஹைதராபாத்  அணியை மூன்று முறை சந்தித்துள்ளது. தான் சந்தித்த மூன்று போட்டியிலும்  ஹைதராபாத் அணியை வென்றுள்ள சென்னை, இன்றைய போட்டியில் வெற்றிப்பெரும் பட்சத்தில் இந்த தொடரில் ஒரு அணியை தொடர்ந்து நான்கு முறை வென்ற அணி என்ற சிறப்பு உண்டாகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com