\
ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி 

ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி 

ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி 
Published on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கலந்துரையாடலில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் நிசித் ப்ராமனிக், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுவரை இல்லாத எண்ணிக்கையாக இந்திய வீரர்-வீராங்கனைகள் 126 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்திய அணி வரும் 17 ஆம் தேதி டோக்கியோ புறப்பட்டுச் செல்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com