டி.என்.பி.எல் 2022 கோப்பையை பகிர்ந்த 'சேப்பாக் மற்றும் கோவை' அணிகள்

டி.என்.பி.எல் 2022 கோப்பையை பகிர்ந்த 'சேப்பாக் மற்றும் கோவை' அணிகள்

டி.என்.பி.எல் 2022 கோப்பையை பகிர்ந்த 'சேப்பாக் மற்றும் கோவை' அணிகள்
Published on

டி.என்.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக போட்டி இரட்டை வெற்றியாளர்கள் கிடைத்துள்ளனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 தொடரில் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் கல்லூரியில் நடைபெற்ற இந்த வருட இறுதிப்போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு டி.என்.பி.எல் 2022 பட்டம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் டி.என்.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக போட்டி இரட்டை வெற்றியாளர்கள் கிடைத்துள்ளனர்.

முன்னதாக, மழையின் காரணமாக டி.என்.பி.எல் 2022 தொடரின் இறுதிப்போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது, டாஸ் வென்ற சேப்பாக் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் 17 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்தது. கோவை அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் மிகச்சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். சேப்பாக் அணி சார்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட்களை எடுக்க, அவருக்கு உறுதுணையாக நின்ற சாய் கிஷோர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக 3வது முறை கோப்பையைக் கைப்பற்ற இறுதிப் போட்டியில் கோவை நிர்ணயித்த 139 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணி 2வது ஓவரில் கேப்டன் கௌஷிக் காந்தி(1) விக்கெட்டை இழக்க அடுத்த ஓவரில் யுதீஷ்வரனின் பந்துவீச்சில் ஜெகதீசன் (2) ஆட்டமிழந்து சேப்பாக் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். சேப்பாக்கின் இரு ஓப்பனர்களும் தங்களது விக்கெட்களை இழக்க அந்த அணி 4 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 14 ரன்கள் மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், ''மழை குறுக்கிட போட்டியின் முடிவு எங்கள் வசம் வந்திருக்கும். இருந்தாலும் இந்த வருடம் எங்கள் அணியின் பெர்ஃபார்மன்ஸ் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்தது" என்று ஷாரூக் தெரிவித்தார்.

டி.என்.பி.எல் தொடரில் ஹாட்ரிக் பட்டத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் பேசிய சேப்பாக் கேப்டன் கௌஷிக் காந்தி, "உண்மையில், யாரும் எதிர்பார்க்காத முடிவு, ஆனாலும் கண்டிப்பாகமீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது மகிழ்ச்சியவிக்கிறது. சந்தீம் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் வங்கள் அணியின் சுயம்பியன் பெஸலர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்", என்று கௌஷிக் காந்தி தெரிவித்தார் டி.என்.பி.எல் 2022 தொடர் நாயகன் விருதை வென்ற சஞ்சய் யாதவ் பேசுகையில், "இந்த வருடம் எனது பெர்ஃபார்மன்ஸ் மிகச்சிறப்பாக இருந்தது. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் ளங்கள் அணியால் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியவில்லை. போட்டி சூழலுக்கு ஏற்ப நம் இன்னிங்ஸை தொடர்ந்து எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒரு ஆல்ரவுண்டராக பந்துவீச்சிலும் எனது கவனத்தை செலுத்த விரும்புகிறேன்" என்று சஞ்சய் யாதவ் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com