டி.என்.பி.எல். - வாய்ப்பை இழந்தது திருச்சி

டி.என்.பி.எல். - வாய்ப்பை இழந்தது திருச்சி

டி.என்.பி.எல். - வாய்ப்பை இழந்தது திருச்சி
Published on

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடியைத் தொடர்ந்து, சேப்பாக் கில்லீஸ் அணி, பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்ததுள்ள திருச்சி அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

திண்டுக்கல் நத்தத்தில் நடைபெற்ற போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை, சேப்பாக் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆட்டத்தின்போது மழை பெய்ததால் 17 ஓவர்கள் கொண்டதாக போட்டி நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சேப்பாக் அணி, 16ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள சேப்பாக் அணி, ஐந்தில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்ததுள்ள திருச்சி அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com