பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு
கனடாவில் நடைபெற்ற உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த கே.கணேசன், சி.மனோஜ், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் பதக்கங்கள் வென்று தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளாக தெரிவித்துள்ளார். இதில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற கே.கணேசனுக்கு 15 லட்சம் ரூபாயும், ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற சி.மனோஜ்-க்கு 11 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஒரு தங்கப்பதக்கம் வென்ற செல்வராஜ்-க்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களது பயிற்சியாளர்கள் ரஞ்சித் குமாருக்கு 3,90,000 ரூபாயும், சுந்தருக்கு 75,000 ரூபாயும் பரிசு வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.