\
கோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு பரிசு அறிவிப்பு !

கோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு பரிசு அறிவிப்பு !

கோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு பரிசு அறிவிப்பு !
Published on: 

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து, மற்றும் ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வீராங்கனையான கோமதி மாரிமுத்து, ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதேபோல ஆண்கள் 4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்க்கும் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் கோமதி மாரிமுத்து, மற்றும் ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு 10 லட்சம் ரூபாயும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்வுக்கு ரூபாய் 5 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மேலும் கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகிய இருவரும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்பதையும் முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் கோமதி மாரிமுத்துவுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com