விளையாட்டு
அர்ஜூனா விருது பெற்ற 3 வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
அர்ஜூனா விருது பெற்ற 3 வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
மத்திய அரசின் அர்ஜூனா விருது பெற்ற தமிழக வீரர்கள் மூன்று பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாரா ஒலிம்பிக்ஸ் நாயகன் மாரியப்பனுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கியுள்ளதையொட்டி அவருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், இடையூறுகளை தாண்டி சாதனை படைக்க விரும்புகிறவர்களுக்கு அவர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வதாக கூறியுள்ளார். டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜூக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், பங்கு பெறக்கூடிய போட்டிகளில் மென்மேலும் வெற்றிகளை பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். இதேபோல், தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், தடகளப் போட்டிகளில் வெற்றிகளை குவித்து சாதனை சிகரங்களை தொட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.