சையத் முஷ்டக் அலி கோப்பை : இறுதி போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங் தேர்வு!

சையத் முஷ்டக் அலி கோப்பை : இறுதி போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங் தேர்வு!

சையத் முஷ்டக் அலி கோப்பை : இறுதி போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங் தேர்வு!
Published on

சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றினால் முடங்கி போயிருந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது உயிர்த்தெழுந்துள்ளன. சுமார் 38 அணிகள் பங்கேற்ற  இந்தத் தொடரில் தமிழக அணியும், பரோடா அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. குரூப் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்றுகளான கால் இறுதி மற்றும் அரையிறுதி போட்டி என இரு அணிகளும் இதுவரை தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி விளையாடி வருகிறது. இறுதி போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019 சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான தொடரில் தமிழக அணி இறுதி போட்டி வரை முன்னேறி கர்நாடகாவிடம் தோல்வியை தழுவி இருந்தது. அதே போல 2006 - 07 சீசனில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. 

தமிழகத்தின் நாராயண் ஜெகதீசன் 7 இன்னிங்ஸில் 350 ரன்களை குவித்து இந்த தொடரின் லீடிங் ரன் ஸ்கோரராக உள்ளார். அதில் நான்கு அரை சதங்களும் அடங்கும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com