நியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்!

நியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்!

நியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்!
Published on

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது டெஸ்ட் தொடரில்  பங்கேற்றுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயி-யில் நேற்றுத் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸும் சிப்ளேவும் களமிறங்கினர். சிப்ளே 22 ரன்களிலும் பர்ன்ஸ் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டென்லி நிலைத்து நின்று ஆடினார். கேப்டன் ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். டென்லி 74 ரன்கள் எடுத்து டிம் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்ததும் பென் ஸ்டோக்ஸ் வந்தார். அவரும் போப்பும் நிதானமாக ஆடி வருகின்றனர்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ் 67 ரன்களுடனும் போப் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று  தொடர்ந்தது. போப் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்த வந்த விக்கெட் கீப்பர், ஜாஸ் பட்லர் 43 ரன்களில் வாக்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்துகொண்டிருந்தாலும் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ், 91 ரன்களில் அவுட் ஆனார். அந்த அணி 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி (Tim Southee) 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com