கடைசி டி20 போட்டி: ஐதராபாத் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடைபெறும் ஐதராபாத் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா பறிகொடுத்து. அதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருஅணிகளும் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றபெற்றன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் இன்றிரவு நடக்கிறது.
முன்னதாக, இரண்டாவது போட்டி முடிவடைந்து ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று போட்டி நடைபெறவுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 1800-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார். ஐதராபாத் கமிஷனர் மகேஷ் பகவத் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார். 56 சிசிடிவி கேமரா மைதானத்தில் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சிறப்பு போலீஸ் படைகள், வீரர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.