மீண்டும் களமிறங்கும் டைகர் வுட்ஸ்

மீண்டும் களமிறங்கும் டைகர் வுட்ஸ்

மீண்டும் களமிறங்கும் டைகர் வுட்ஸ்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கால்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள், அறுவை சிகிச்கைள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 6 போட்டிகளில் மட்டுமே வுட்ஸ் பங்கேற்றார். நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கவிருப்பதாக அவர் அறிக்கை விட்டுள்ளார். நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 3 ஆம் தேதி வரை பஹாமாஸில் நடைபெறும் ஹீரோ உலக சேலஞ்ச் தொடரில் அவர் பங்கேற்கவுள்ளார். 41 வய‌தாகும் வுட்ஸ் சர்வதேச அளவிலான பெரிய கால்ஃப் தொடர்களில் 14 பட்டங்களை வென்ற பெருமைக்குரியவர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com