மீண்டும் களமிறங்குகிறார் டைகர் வுட்ஸ்!

மீண்டும் களமிறங்குகிறார் டைகர் வுட்ஸ்!

மீண்டும் களமிறங்குகிறார் டைகர் வுட்ஸ்!
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கால்ப் வீரர் டைகர் வுட்ஸ் 9 மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கவுள்ளார். 

41 வயதான டைகர் வுட்ஸ் சர்வதேச அளவிலான பெரிய கால்ஃப் தொடர்களில் 14 பட்டங்களை வென்ற பெருமைக்குரியவர். 
எனினும் கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் பதக்கம் எதுவும் அவர் வெல்லவில்லை. துபாயில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாலைவன கால்ஃப் தொடரில் அவர் பாதியிலேயே விலகினார். பின்னர் எந்த தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார். இப்போது 9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் மீண்டும் அவர் களமிறங்குகிறார். பஹாமசில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள உலக சேலஞ்ச் போட்டிக்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com