\
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 3 புதுமுகங்கள்

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 3 புதுமுகங்கள்

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 3 புதுமுகங்கள்
Published on: 

இலங்கை அணியுடனான இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் உட்பட 3 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் இப்போது நடந்து வருகிறது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. வரும் 20,22,24 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 
டி20 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். இதில் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த வாசிஷ்டன் சுந்தர், கேரளாவைச் சேர்ந்த பசில் தம்பி, தீபக் ஹூடா ஆகிய புதுமுகங்களும் இடம் பெற்றுள்ளனர்.

அணி விவரம்: 
ரோகித் ஷர்மா (கேப்டன்), ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சேஹல்‌, தீபக் ஹூடா, ஜஸ்பீரித் பும்ரா, முஹமது சிராஜ், ஜெய்தேவ் உனட்கட், வாஷிங்டன் சுந்தர், பசில் தம்பி. 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com