ஐபிஎல்: துபாயில் வந்திறங்கிய சிஎஸ்கேவின் முக்கிய மூவர்

ஐபிஎல்: துபாயில் வந்திறங்கிய சிஎஸ்கேவின் முக்கிய மூவர்
ஐபிஎல்: துபாயில் வந்திறங்கிய சிஎஸ்கேவின் முக்கிய மூவர்

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களான டுவைன் பிராவோ, டூப்ளசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் துபாய் வந்தடைந்தனர்.

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் போட்டிகள் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 30-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வீரர்கள் சிலர் கடந்தமாதமே துபாய் சென்றுவிட்டனர். மேலும் அங்கு சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக மொயின் அலி, சாம் கரண் உள்ளிட்ட வீரர்களும் துபாய் சென்றனர். இந்நிலையில் கரீபியன் ப்ரீமியல் லீக் போட்டிகள் முடிவடைந்ததையடுத்து டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர் மற்றும் டூப்ளசிஸ் ஆகியோர் துபாய் சென்றுள்ளனர்.

2020-ஆம் ஆண்டு ஐபிஎல் சிஎஸ்கேவுக்கு மிக மோசமாகவே இருந்தது. ஆனால் இந்தாண்டு ஐபிஎல் சிஎஸ்கே விஸ்வரூபம் எடுத்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றிப்பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. "ப்ளே ஆஃப்" சுற்றுக்கு தகுதிப்பெற சிஎஸ்கேவுக்கு இன்னும் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றால் போதுமானதாக இருக்கும். அமீரகத்தில் இன்னும் 7 போட்டிகள் சிஎஸ்கேவுக்கு பாக்கியிருக்கிறது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com