\
3-வது ஒரு நாள் போட்டி: பாண்ட்யாவை பதம் பார்த்தார் தாரங்கா!

3-வது ஒரு நாள் போட்டி: பாண்ட்யாவை பதம் பார்த்தார் தாரங்கா!

3-வது ஒரு நாள் போட்டி: பாண்ட்யாவை பதம் பார்த்தார் தாரங்கா!
Published on

பாண்ட்யா வீசிய ஒரே ஒவரில் 5 பவுண்டரிகளை விளாசி ஷாக் கொடுத்தார் இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தாரங்கா.

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் ஆடும் லெவனில், கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் உடல் நிலை சரியில்லாததால் தேர்வு செய்யப்படவில்லை.

இதையடுத்து இலங்கை அணியின் தாரங்காவும் குணதிலகாவும் களமிறங்கினர். நான்காவது ஓவரை வீசிய பும்ரா, குணதிலகாவின் விக்கெட்டை கபளீகரம் செய்தார். இருந்தாலும் இலங்கை அணி அடித்து ஆடி வருகிறது. பத்தாவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யாவின் பந்தில் தொடர்ந்து 5 பவுண்டரிகளை விளாசி ஷாக் கொடுத்த தாரங்கா, 36 பந்தில் அரை சதம் அடித்தார். இலங்கை அணி, 14 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு  84 ரன் எடுத்து ஆடி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com